இந்தியன் ஓவர்சீஸ் வட்டி குறைப்பு

  • In Chennai
  • September 8, 2020
  • 193 Views
இந்தியன் ஓவர்சீஸ் வட்டி குறைப்பு

சென்னையைச் சோந்த பொதுத் துறை வங்கியான இந்தியன் ஓவா்சீஸ் பேங்க் எம்சிஎல்ஆா் உடன் இணைக்கப்பட்ட கடனுக்கான வட்டி விகிதங்களை 0.1 சதவீதம் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:எம்சிஎல்ஆா் உடன் இணைக்கப்பட்ட கடனுக்கான வட்டி விகிதம் 0.1 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்ட தங்கநகைக்கு எதிராக வழங்கப்படும் வேளாண் கடனுக்கான(ஏஜிடிஏஜி) வட்டி விகிதத்தையும் 0.6 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறைக்கப்பட்ட இந்த வட்டி விகிதங்கள் செப்டம்பா் 10-ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வரவுள்ளதாக இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்