சலுகை அனுபவிக்க வருவாயை குறைத்து காட்டியதாக ஏராளமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க புது உத்தி?; பான் நம்பரை வைத்து கணக்கிட்டு அதிரடி

சலுகை அனுபவிக்க வருவாயை குறைத்து காட்டியதாக ஏராளமான நிறுவனங்களுக்கு நோட்டீஸ்: ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க புது உத்தி?; பான் நம்பரை வைத்து கணக்கிட்டு அதிரடி

வரிச்சலுகைகளை அனுபவிப்பதற்காக ஆண்டு வருவாய் அளவை குறைத்துக்காட்டியதாக, ஏராளமான நிறுவனங்களுக்கு வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா பரவலால் நசிந்துள்ள தொழில்துறையை மீட்க சலுகை திட்டங்களை அறிவித்த மத்திய அரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஆண்டு வருவாய் அதிகரித்தது. இதனால், அதிக நிறுவனங்கள் குறு, சிறு நிறுவன வரம்புக்குள் வந்து விட்டன உதாரணமாக, முன்பு, உற்பத்தி துறையாக இருந்தால் ரூ.25 லட்சம் வரையிலான முதலீடு மற்றும் சேவை துறையாக இருந்தால் லட்சம் வரையிலான முதலீடு மற்றும் சேவை துறையாக இருந்தால் ரூ.10 லட்சம் வரையிலான முதலீடு உள்ள நிறுவனங்கள் குறு நிறுவனங்கள் என வகைப்படுத்தப்பட்டன.தற்போது உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டு, ரூ.1 கோடி வரையிலான முதலீடு மற்றும் ரூ.5 கோடி வரையிலான ஆண்டு வர்த்தகம் உள்ள நிறுவனங்கள் குறு நிறுவனங்கள் வரம்புக்குள் வந்து விடும். குறு நிறுவனங்களுக்கு அதிக சலுகைகள் உண்டு. கொரோனா பரவலுக்கு பிறகு, மத்திய அரசு மேலும் ஒரு சலுகையை அறிவித்தது. அதாவது, ஆண்டு வருவாய் ரூ.5 கோடிக்கு கீழ் உள்ள நிறுவனங்கள், கடந்த மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர்-3பி படிவம் தாக்கல் செய்ய ஜூன் வரை அவகாசம் உள்ளது. வட்டி, தாமத கட்டணம், அபராதம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது என அறிவித்தது.

இந்நிலையில், ஜிஎஸ்டி படிவம் தாக்கல் அடிப்படையில் ஆய்வு செய்து, ரூ.5 கோடிக்குள் ஆண்டு வர்த்தகம் காண்பித்துள்ள ஏராளமான நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், 2019-20 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டிஆர்-3பி படிவம் மற்றும் அதில் குறிப்பிடப்பட்ட பான் எண்ணின்படி ஆண்டு வர்த்தகம் ரூ.5 கோடியை தாண்டியுள்ளது. அதே அளவை வைத்து பார்க்கும்போது கடந்த ஜூலை 25ம் தேதி வரையிலான கணக்கு குறைவாக உள்ளது. எனவே, இதற்கேற்ப மதிப்பீடு செய்து தாமத கட்டணம், வட்டியை செலுத்தலாம் என கூறியுள்ளது. கொரோனா பரவலால் குறு, சிறு தொழில்கள் உட்பட அனைத்தும் முடங்கிய நிலையில், இந்நோட்டீஸ் தொழில்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

* மார்ச், ஏப்ரல், மே மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர்-3பி படிவம் தாக்கல் செய்ய, குறு நிறுவனங்களுக்கு ஜூலை வரை அவகாசம் உண்டு. தாமத கட்டணம், வட்டி, அபராதம் கிடையாது.
* ரூ.5 கோடி வரை ஆண்டு வர்த்தகம் இருப்பவர்கள் இந்த சலுகையை பெறலாம். வரிச்சலுகையும் உண்டு.
* சலுகைக்காக வருமானத்தை குறைத்து காட்டியதாக, பான் எண் அடிப்படையில் கண்டு பிடித்து, தாமத கட்டணம் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்