டிரம்ப் பதவி நீக்கம்; தீர்மானத்துக்கு அனுமதி

  • In General
  • December 5, 2019
  • 193 Views
டிரம்ப் பதவி நீக்கம்; தீர்மானத்துக்கு அனுமதி

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் டிரம்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்துக்குஅந்நாட்டு நாடாளுமன்றத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் எதிரிகளை பழி வாங்குவதற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக அதிபர் டொனால்டு டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. நீண்ட நாட்களாக எம்பிக்கள் குழுவில் விசாரணை நடைபெற்ற நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி இதற்கான தீர்மானத்துக்கு அனுமதித்துள்ளார்.

இந்நிலையில், தன் மீதான தீர்மானத்தை செனட் சபையில் எதிர் கொள்ளப்போவதாக அதிர்பர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்