சாலை சீரமைக்க போராட்டம்

சாலை சீரமைக்க போராட்டம்

ஓசூர்:

குண்டும் குழியாமாக உள்ள சாலையை சீரமைக்கோரி ஒசூர் அருகே 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணை அருகே 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென 50ற்கும் அதிகமானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சாலை அமைக்கும் பணிக்கான டெண்டர் முடிந்து பணிகள் தொடங்க உள்ளதை தெரிவித்த பின்பாக சாலை மறியலை கைவிட்டனர்.

பொதுமக்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர்: முதல்வர் அறிவித்த திட்டங்கள் ஓசூர் பகுதிகளில் ஒன்றரை ஆண்டுகளில் முடிக்க முடியாத அளவில் எண்ணற்ற பணிகளை அறிவித்து தொடக்கி வைத்துள்ளதாகவும், விவசாய குடும்பத்தில் விவசாய தொழிலை மேற்க்கொண்ட தமிழக முதல்வர் ஏழை தொழிலாளர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நன்கு அறிந்தவர், தமிழகத்தில் நடத்தப்பட்ட முதலமைச்சரின் மக்கள் தொடர்பு முகாமில் பெறப்பட்ட 9.5 லட்சம் மனுக்களில் 5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பயணாளர்கள் பயன்பெற்று வருவதாக பேசினார்.

முன்னாள் அமைச்சரின் பேச்சால் விவசாயிகள் பொதுமக்கள் அரசிற்கு நன்றி தெரிவித்து கலைந்து சென்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்