துவரை விளைச்சல்; விவசாயிகள் மகிழ்ச்சி

துவரை விளைச்சல்; விவசாயிகள் மகிழ்ச்சி

ஒசூர்:

ஓசூர் பகுதிகளில் துவரை அதிக விளைச்சல் காரணமாக நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்,சூளகிரி,தளி,கெலமங்கலம் ஆகிய ஒன்றியங்களில் துவரை 5 ஆயிரம் ஹெக்டேர்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

துவரை பருப்பு அன்றாட உணவில் அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், ஓசூர் உட்பட 4 ஒன்றியங்களில் துவரை நல்ல விளைச்சலை கொடுத்திருப்பதாகவும், ஒரு ஏக்கர் துவரை விவசாயம் செய்ய 20 ஆயிரம் ரூபாய் செலவிடுவதாகவும், நன்கு விளைந்தால் ஏக்கருக்கு 3 டன் வரை அறுவடை செய்யும் முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது துவரைக்காய் பச்சையாகவே ஒருகிலோ 40 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்கப்படுவதால் துவரை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்