ஒசூர் அதிமுகவை மாற்றி அமைக்கிறது தலைமை, யார் யாருக்கு என்ன பொறுப்பு?

ஒசூர் அதிமுகவை மாற்றி அமைக்கிறது தலைமை, யார் யாருக்கு என்ன பொறுப்பு?

தமிழகம் முழுவதும் அதிமுகவில் ஊராட்சி செயலாளர் பதவிகளை அதிரடியாக நீக்கியது ஈபிஎஸ் – ஒபிஎஸ் தலைமையிலான அதிமுக

மாநிலம் முழுவதும் மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய செயலாளர், நகர செயலாளர் ஆகிய பொறுப்புக்களிலும் தேர்தலுக்கு முன்பகா அதிரடி மாற்றத்தை ஏற்ப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது

ஒசூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை 2016 ஆம் ஆண்டு முதல்முறையாக அதிமுக வெற்றி பெற்று பாலகிருஷ்ணா ரெட்டி அமைச்சராகி இருந்தாலும் அமைச்சரின் தொகுதி 2019 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் 25 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வசம் சென்றது ஒசூர் எம்எல்ஏ பதவி,

ஒசூர்,மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதால் உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி மேயர் பதவியை அதிமுக கைப்பற்ற வேண்டும் 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஒசூர் தொகுதியை அதிமுக மீண்டும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில், ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முக்கிய பொறுப்புக்களில் அதிரடி மாற்றம் ஏற்ப்படுத்தப்படுகிறது என்கிற பேச்சு எழுந்துள்ளது.

ஒசூர் சட்டமன்ற தொகுதி கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்குட்பட்டதாக இருப்பதால் ஒசூர் ஒன்றிய செயலாளராகவும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளராகவும் தொடர்ந்து பாலகிருஷ்ணா ரெட்டி பதவி வகித்து வருகிறார்.

ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரிகை உள்ளிட்ட 6 ஊராட்சிகள் சூளகிரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்டிருப்பதால்

6 ஊராட்சிகளுக்கு ஒரு ஒன்றிய செயலாளரும், ஒசூர் ஒன்றியத்திற்குட்பட்ட 26 ஊராட்சிகளில் இரண்டு ஒன்றிய செயலாளர்களை நியமிக்க அதிமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகறிது

மாவட்ட செயலாளராக தொடர்ந்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அவர்களே நீடிப்பார் எனவும், மூன்று ஒன்றிய செயலாளர்கள் பொறுப்பிற்கு பலரின் பெயர் அடிப்பட்டு வருகிறது.

ஒசூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டிருப்பதால் நகர செயலாளராக உள்ள பால் நாராயணன் பதிலாக பாலகிருஷ்ணா ரெட்டியின் ஆதரவாளரான சிட்டி ஜெகதீஸ் மாநகர செயலாளராக நியமிக்கப்படலாம் என்கிற பேச்சு எழுந்துள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அதிமுகவில் ஒசூர் தொகுதியில் புதிய பொறுப்பு யாருக்கு என்கிற பரபரப்பு மேல் ஓங்கி உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்