துரத்தி.. துரத்தி.. கொட்டிய தேனீ… பக்தர்கள் நுழைய வேண்டாம்… கோவில் நிர்வாகம் எச்சரிக்கை..!!

துரத்தி.. துரத்தி.. கொட்டிய தேனீ… பக்தர்கள் நுழைய வேண்டாம்… கோவில் நிர்வாகம் எச்சரிக்கை..!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களை தேனீக்கள் துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூதங்களில் அக்னி ஸ்தலத்தை கொண்ட கோவிலாக உள்ளது. இங்கே தமிழகம் முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் குவிந்த வண்ணம் இருப்பர்.

இந்த கோவிலுக்கு நான்கு கோபுரவாசல் உள்ளது. அதன்படி, பக்தர்கள் பெரும்பாலும் அம்மணி அம்மன் கோபுரம் வாசல் மற்றும் திருமஞ்சன கோபுர வாசல் வழியாக அதிகமாக அனுமதிக்கப்படுவர். நேற்றையதினம் அம்மணி அம்மன் கோபுரம் வாசல் வழியாக பக்தர்கள் செல்லும் போது அங்குள்ள தேன்கூடு கலைக்கப்பட்டு அதில் இருந்த தேனீக்கள் மக்களை விரட்டி விரட்டி கொட்டி தாக்கியது.

இதில் ஒரு தம்பதியினர் படுகாயம் அடைய பக்தர்கள் அச்சமடைந்தனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரும் அங்கிருந்து விலகிச் சென்றுவிட்டனர். அம்மணி அம்மன் கோவில் கோபுர வாசல் மூடப்பட்டு பக்தர்கள் வேறு வாசல் வழியாக உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அனைத்து கோபுர வாசல்களிலும் அனைத்து தேன் கூடுகளையும் அகற்ற கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்