இந்தி ஒற்றை மொழி என்பதை ஏற்க முடியாது

இந்தி ஒற்றை மொழி என்பதை ஏற்க முடியாது

சென்னை:
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தி குறித்து பதிவிட்டிருந்தார்.

இது நாடு முழுவதும் பல்வேறு மொழி பேசும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ராமசாமி படையாச்சியார் சிலைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்:

8வது அட்டவணையில் தேசிய மொழியாக 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்திய ஒற்றை மொழி பேசும் நாடல்ல.

இந்திய ஒரு இனம், ஒரு மதத்தை சேர்ந்த நாடல்ல. ஒற்றை மொழி என்பதை நிச்சயமாக ஏற்க முடியாது.

பிற மொழிகள் பேசும் மக்கள் ஒருபோதும் இந்தியை ஏற்கமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்