உலகின் அதிக வயதுடைய ஜப்பான் தாத்தா மரணம்!

உலகின் அதிக வயதுடைய ஜப்பான் தாத்தா மரணம்!

உலகில் வாழ்பவர்களில் மிகவும் அதிக வயதுடைய நபராக அறியப்பட்ட ஜப்பானை சேர்ந்த சிட்டெட்ஸூ வடனாபே காலமானார். அவருக்கு வயது 112.

உலகில் வாழ்பவர்களில் அதிக வயதுடையவர்களுக்கான கின்னஸ் சாதனை சான்றிதழை பிப்ரவரி 12-ம் தேதி தான் சிட்டெட்ஸூ வடனாபே பெற்றார். இவர் 1907-ம் ஆண்டு ஜப்பானில் உள்ள நீயிகதா நகரில் பிறந்தவர்.

இவர் வயது மூப்பு காரணமாக கடந்த 23-ம் தேதி உயிரிழந்து விட்டதாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. அவர் கின்னஸ் சாதனை சான்றிதழ் பெறும் போது அவரிடம் இவ்வளவு காலம் வாழ்வதற்கான ரகசியம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், ‘யார் மீதும் கோபப்படாதீர்கள், சிரித்துக்கொண்டே இருங்கள்’என்று கூறினார். முன்னதாக இந்த இடத்தை ஜப்பானின் மசாசோ நொனாகா பிடித்திருந்தார்.

இவர் ஜனவரி மாதம் இறந்ததை அடுத்து சிட்டெட்ஸூ வடனாபேவிற்கு இந்த இடம் கிடைத்தது. மசாசோ இறக்கும்போது அவருக்கு வயது 112 ஆண்டுகள் 266 நாட்கள். சிட்டெட்ஸூ வடனாபே உயிரிழக்கும் போது அவருக்கு 112 வயது 344 நாட்கள்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்