14 மாவட்டத்தில் மிக கனமழை

14 மாவட்டத்தில் மிக கனமழை

சென்னை:

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

கோயம்புத்தூர், நீலகிரி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுச்சேரி, திண்டுக்கல் தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அடுத்த இரு நாட்டகளுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்