‘‘மீண்டு வா நேசா’’ நேசமணிக்கு ஹர்பஜன் சிங்..!

  • In Sports
  • May 30, 2019
  • 448 Views
‘‘மீண்டு வா நேசா’’ நேசமணிக்கு ஹர்பஜன் சிங்..!

நேசமணி என்ற வடிவேலுவின் காமெடிக்கு, 18 வருடம் கழித்து தற்போது #Pray_For_Nesamani ஹாஸ்டேக் மூலம் மக்கள் வெளிபடுத்துவது தற்போது வைராக பரவி சமூகவலைத்தளத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது.

நேசமணியின் அண்ணன் மகன் சுவரில் ஆனியை சுத்தியலில் பிடுங்கிக்கொண்டிருக்கும்போது, நேசமணியின் நடு மண்டையில் பட்டு மூச்சு பேச்சு இல்லாம சுருண்டு விழுந்தார். இதனை கிருஷ்ணமூர்த்தி முன்விரோதத்தால் தான் செய்தார் எனவும், எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்றும், கிருஷ்ணமூர்த்தியின் நண்பர்களான அரவிந்த் மற்றும் சந்துருவிற்கும் தொடர்பு உள்ளதாகவும், 3 பேரும் மீதும் கொலை செய்ததாகவும் சமூக வலைதளத்தில் #Pray_For_Nesamani ஹாஸ்டேக் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் தன்னுடைய டுவிட்டர் பதிவில், ‘‘என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்…ட்ச்! மீண்டு வா நேசா!’’ என பதிவிட்டுள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்