துப்பாக்கி சூடு; 9 பேர் பலி

துப்பாக்கி சூடு; 9 பேர் பலி

 

பிரேசில்:

பிரேசில் விருந்து நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டால் 9 பேர் பலியாகியுள்ளனர்.

பிரேசிலில் ஸா பாலோ என்னுமிடத்தில் இரு குற்றவாளிகளை போலீசார் துரத்திவந்தபோது, அப்பகுதியில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் குற்றவாளிகள் புகுந்தனர். அப்போது கூட்டதில் புகுந்த அவர்கள், போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அலறியடித்து ஓடினர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலியாகினர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்