அமராவதி:
தமிழகத்தை போன்று ஆந்திர மாநிலம் முழுவதும் அரசே மதுபான கடைகளை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ‘டாஸ்மாக்’ என்ற பெயரில் தமிழக அரசு மதுபானக்கடைகளை நடத்தி வருகிறது. இதேபோல், ஆந்திராவிலும் மது விற்பனையை அரசே நடத்தும் என சட்டப்பேரவையில் நேற்று மசோதா நிறைவேற்றப்பட்டது.