துவங்கிய முக்கிய ஆலோசனை எடுக்கப்படவிருக்கும் முக்கிய முடிவுகள்

துவங்கிய முக்கிய ஆலோசனை எடுக்கப்படவிருக்கும் முக்கிய முடிவுகள்

இந்தியாவில் அமலாகியுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நான்காம்கட்ட ஊரடங்கு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு சில மாநிலங்களில் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில், ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படலாமா? அல்லது பாதிக்கப்பட்ட இடங்களில் செய்ய வேண்டிய நடவடிக்கை குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

நான்காம் கட்ட ஊரடங்கு மே மாதம் 31 ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், தமிழக முதல்வர் அணைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.இதன் மூலமாக ஊரடங்கு நீடிக்கப்படுமா? அல்லது வழங்க வேண்டிய தளர்வுகள் குறித்த முக்கிய ஆலோசனைகளை தமிழக முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.

இதில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்புகள் மற்றும் மீட்பு நடவடிக்கை, திறக்க வாய்ப்புள்ள கடைகள், இ பாஸ் வழங்கும் முறைகள் குறித்த பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக்கூட்டத்தின் முடிவில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்