உயிருக்கு ஆபத்து; பாதுகாப்பு கொடுங்க

  • In Cinema
  • November 26, 2019
  • 70 Views
உயிருக்கு ஆபத்து; பாதுகாப்பு கொடுங்க

சென்னை:

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நடிகை காயத்ரி ரகுராம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அயோத்தி தீர்ப்பு குறித்து திருமாவளவன் இந்து கடவுளை அவதூறாக பேசியதற்கு நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்துக்கள் திருமாவளவனை அடிக்கணும்’’ என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை பதிவிட்டு வந்தார்.

இதனையடுத்து, அவரின் வீட்டு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் போராட்டம் செய்தனர். இதனைத்தொடர்ந்து நடிகை காயத்ரி ரகுராமின் டுவிட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று காயத்ரி ரகுராம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்