விபத்தில் சிக்கியவர்களுக்கு பணமில்லா சிகிச்சை!

விபத்தில் சிக்கியவர்களுக்கு பணமில்லா சிகிச்சை!

விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு பணமில்லாமல் உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதற்குத் தேவையான வசதியை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக, பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ், விபத்தில் சிக்கியவருக்கு ரூ.2.5 லட்சம் வரை ஒதுக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது.

‘கோல்டன் ஹவர்’ (Golden hour) எனப்படும் விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் கொடுக்கப்படும் முதலுதவி உள்ளிட்ட செலவுகளும் இத்திட்டத்தில் அடங்கும்.

விபத்தில் சிக்கும் அனைவருக்குமே இத்திட்டம் பொருந்தும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களிடமிருந்து வரும் 10ஆம் தேதிக்குள் கருத்து கேட்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஆண்டுதோறும் 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் சாலை விபத்துக்களில் பலியாகின்றனர்; ஒவ்வொரு நாளும் 1,200 விபத்துக்கள் நடக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்