தள்ளுவண்டி கடைக்கு உணவு தரச்சான்றிதழ்

  • In Chennai
  • September 16, 2019
  • 989 Views
தள்ளுவண்டி கடைக்கு உணவு தரச்சான்றிதழ்

சென்னை:
சென்னையில் எத்தனையோ உணவு கடைகளுக்கு தர இல்லாமல் கூறி சீல் வைத்த செய்தியை அனைவரும் அறிவோம்.

அதே சென்னை மெரினா கடற்கரையில் இப்போ தள்ளுவண்டி கடை வைத்திருக்கும் சுந்தரி என்பவரின் கடைக்கு உணவுத் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்துள்ளது.

மெரினா உழைப்பாளர்கள் சிலை அருகில் தள்ளுவண்டியில் உணவுக் கடையை சுந்தரி என்பவர் வைத்துள்ளார்.

இவரது கடையை வாடிக்கையாளர்கள் ‘சுந்தரி அக்கா’ கடை என்று அழைப்பார்கள். இவரது கடை தொடர்பாக பல செய்திகள் வெளியாகியுள்ளது.

இதனால் இந்தக் கடை பிரபலமான கடையாக திகழ்ந்து வருகிறது.

மீன், ஆட்டுக்கறி, இறால் என்று வகை வகையான அசைவ உணவுகள் கிடைக்கும்.

மேலும், குறைந்த விலை என்பதால் மதிய நேரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகளவில் காணப்படுவர்.

இந்த கடைக்கு வாடிக்கையாளர்கள் கொடுத்த அங்கீகாரத்துடன் தற்போது மேலும் ஒரு புதிய அங்கீகாரம் அரசால் கிடைத்திருக்கிறது.

தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையிடம் இருந்தும், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் இருந்தும் இவரது கடைக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதாக அங்கீகாரச் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.

அதில், மிகவும் தரமான தெருக்கடை உணவு என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ் சுந்தரியை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதனை வாடிக்கையாளர்களுக்கு சமர்பிப்பதாகவும் உற்சாகமாக தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்