இந்திய டிரைவருக்கு பாக்., வீரர்கள் விருந்து

இந்திய டிரைவருக்கு பாக்., வீரர்கள் விருந்து

பிரிஸ்பன்:

ஆஸிரேலியாவில் இந்திய டிரைவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் விருந்து அளித்து உபசரித்தது நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, பிரிஸ்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது.

பிரிஸ்பன் டெஸ்ட் போட்டியின் போது வர்ணணயாளர்கள் அலிசன் மிட்செல், மிட்செல் ஜான்சன் ஆகியோர் கூறுகையில், ‘‘சில தினங்களுக்கு முன் இந்தியாவைச் சேர்ந்த கார் டிரைவர் ஒருவருக்கு பாகிஸ்தான் அணி தங்கியிருந்த ஓட்டலில் இருந்து போனில் அழைப்பு வந்தது.

இதனைத்தொடர்ந்து, கார் டிரைவர் ஓட்டலுக்கு சென்று பாகிஸ்தான் வீரர்கள் 5 பேரை கிரிக்கெட் மைதானத்திற்கு அழைத்து சென்று விட்டுள்ளார். பின்னர், இந்திய உணவு விடுக்கு செல்ல விருப்பிய அவர்களை அங்கு அழைத்துச்சென்றார்.

பின்னர், பாகிஸ்தான் வீரர்கள் கார் டிரைவருக்கு கட்டணம் கொடுத்துள்ளனர். அவர் வாங்க மறுத்த நிலையில், நெகிழ்ந்து போன பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கார் ஒட்டுநரை தங்களுடன் உணவு விடுதிக்குள் அழைத்துச் சென்று விருந்து அளித்தனர் என அந்த புகைப்படங்களை அவர்கள் வெளியிட்டிருந்தனர்.

அந்த புகைப்படங்களை தனியார் ஒலிபரப்பு நிறுவனம் தனது டுவிட்டர் பதிவில் வெளியிட்டிருந்தது. அது தற்போது வைரலாகப்பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்