விவசாயி சுட்டுக்கொலை: இருவருக்கு ஆயுள்

விவசாயி சுட்டுக்கொலை: இருவருக்கு ஆயுள்

ஒசூர்:

முன்விரோதம் காரணமாக விவசாயியை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இருவருக்கு ஆயுள்தண்டனை விதித்து ஒசூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தொளுவபெட்டா கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா(65) இவர் 2015 ஆம் ஆண்டு ருத்ரம்மா என்பவருடன் கணவன் மனைவியுமாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

ருத்ரம்மாவிற்கும் அதே கிராமத்தை சேர்ந்த சின்னதிம்மன் மற்றும் மல்லப்பா ஆகிய இருவருடன் தொடர்பு இருந்ததை அறிந்த பசப்பா, ருத்ரம்மாவுடனான தொடர்பை கைவிடுமாறு அவர்களை எச்சரித்தும் மேலும் பசப்பாவிடம் மல்லப்பா 500 ரூபாய் கடன் வாங்கி இருந்ததால் பணம் திருப்பி தரும்படி ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மல்லப்பா, சின்னதிம்மன் ஆகிய இருவரும் பசப்பாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்து இருவரும், பசப்பாவின் வீட்டருகே சென்றுள்ளனர். அதே நேரத்தில் பசப்பா வெளியே வர நாட்டுத்துப்பாக்கியால் மல்லப்பா சுட்டதில், அவர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுக்குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் இருவரையும் (மல்லப்பா, சின்னதிம்மன்) கொலை குற்றவாளியாக வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு ஒசூர் நீதிமன்றத்தில் 4 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த நிலையில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வுநீதிமன்ற நீதிபதி அசோகன் அவர்கள் கொலை குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 2,500 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

ஆயுள் தண்டனை விதித்த இருவரும் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்