ஆந்திர முன்னாள் சபாநாயகர் தற்கொலை

ஆந்திர முன்னாள் சபாநாயகர் தற்கொலை

ஹைதராபாத்:

ஆந்திர முன்னாள் சபாநயாகர் கோடல சிவபிரசாத் ராவ், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரசார் தனது குடும்ப உறுப்பினர்கள் மீது வழக்குத் தொடுத்ததை அடுத்து, சிவபிரசாத் ராவ் அவமானப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டபோதிலும், தொடர்ந்து மனச்சோர்வுடன் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

அவரது குடும்பத்தினர் கூறுகையில், சிவ பிரசாத் ராவ் காலை உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டின் மாடியில் உள்ள தனது அறைக்குச் சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் கீழே வரவில்லை.

மேலே சென்று அவரது அறையில் பார்த்தபோது, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும், உடனடியாக அவரை ஹைதராபாத்தில் உள்ள பசவதாரகம் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறினர்.

1983ம் ஆண்டில் என்.டி.ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியை ஆரம்பித்தபோது கோடெலா அரசியலில் இறங்கினார். சந்திரபாபு நாயுடு ஆட்சிகாலத்தில் சிவபிரசாத் ராவ் சட்டமன்ற சபாநாயகராக பதவி வகித்தவர் ஆவார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்