50 யானைகள் விரட்டியடிப்பு

50 யானைகள் விரட்டியடிப்பு

ஒசூர்:

ஒசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த யானை கூட்டத்தில் 50க்கும் அதிகமான யானைகள் தேன்கனிக்கோட்டை பகுதிக்கு விரட்டியடித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சானமாவு வனப்பகுதியில் ஒருவாரகாலமாக 50 யானைகள் முகாமிட்டிருந்த நிலையில், மேலும் மற்றொரு குழுவாக 50 காட்டுயானைகள் நள்ளிரவில் சானமாவு வனப்பகுதிக்கு இடம் பெயர்ந்தன.

சானமாவு வனப்பகுதி சுற்றிலும் உள்ள கிராம மக்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

ராகி,நெல் உள்ளிட்டவை அறுவடைக்கு தயாராகி அதற்கான பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டிருப்பதால் காட்டுயானைகளின் வருகை விவசாயிகளை அச்சத்திற்க்குள்ளாக்கியது.

இந்த யானைகளை அடர் வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டுமென விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று, ஒசூர் வனக்கோட்ட ஊழியர்கள் சானமாவு வனப்பகுதியிலிருந்த யானைகளை பட்டாசு வைத்து தேன்கனிக்கோட்டை அடர்வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

ஒருக்குழுவை மட்டுமே விரட்ட முடிந்த நிலையில் 50 காட்டுயானைகள் சானமாவு அடுத்த போடிச்சிப்பள்ளி – சினிகிரிப்பள்ளி சாலையை கடந்து தேன்கனிக்கோட்டை பகுதிக்கு விரட்டி செல்லப்பட்டுள்ளது.

50 யானைகள் விரட்டப்பட்ட நிலையில் மேலும் உள்ள யானைகளும் விரட்ட வேண்டுமென வனத்துறையினருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்