உடுமலை – மூணார் சாலையில் ஹாயாக உலாவரும் காட்டு யானைகள் 144 தடை உத்தரவு எங்களுக்கு இல்லை

உடுமலை – மூணார் சாலையில் ஹாயாக உலாவரும் காட்டு யானைகள் 144 தடை உத்தரவு எங்களுக்கு இல்லை

உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை மற்றும் அமராவதி வனசரகம் வனத்தில் புலி, கரடி, சிறுத்தை, யானை, காட்டுமாடு, புள்ளிமான், கடமான், செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இவற்றில் காட்டு யானை, காட்டுமாடு, மான் உள்ளிட்டவை கோடை காலத்தில் வனத்தை விட்டு வெளியேறி அமராவதி அணைப் பகுதிக்கு கூட்டமாக சென்று தண்ணீர் குடித்து செல்கின்றது. மேலும், மூணார் சாலையோரம் அவ்வப்போது ஓய்வெடுப்பது வழக்கம் உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், தமிழக-கேரள எல்லையான சின்னார் செக்போஸ்ட் மற்றும் 9/6 செக்போஸ்ட்டை கடந்து உடுமலைக்கு செல்ல வேண்டிஉள்ளது.

இதனால் தமிழக- கேரள மலைவழிப்பாதை ஆள்நடமாட்டம் அறவே இன்றி வெறிச்சோடியது.மேலும் சோதனைச்சாவடியில் பணியாற்றுகின்ற வனத்துறையினர் மட்டுமே இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் காட்டு யானைகள், காட்டுமாடுகள், மான்கள் கூட்டம், கூட்டமாக ஆள் நடமாட்டம் இல்லாத சாலைகளில் ஹாயாக உலா வருகின்றன. சாலையோரம் உள்ள மரங்களில் உள்ள பசுந்தளிர்களை தின்பதோடு குட்டியுடன் யானை கூட்டம் சாலையோரமாக முகாமிட்டுள்ளது. இது போல காட்டுமாடு, மான்கள் போன்றவையும் உடுமலை-மூணார் சாலையில் ஏழுமலையான் கோயில் பிரிவு, காமனூத்துப்பள்ளம், புங்கன்ஓடை, கூட்டாறு பிரிவுகளில் உலா வருகின்றன.

வாகன ஓட்டிகள் தொந்தரவும் இல்லாததால் 24 மணி நேரமும் சாலைகளில் வனவிலங்குகள் தங்களது வசிப்பிடங்களை மாற்றி வலம் வருகின்றன. 144 தடை உத்தரவு மனிதனுக்கு மட்டும் தான் பொருந்தும் என்று வனவிலங்குகள் எங்களுக்கு பொருந்தாது என வனங்களை விட்டு வெளியேறி சாலைகளில் சுதந்திரமாக உலவி வருகின்றன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்