ராஜ்யசபா சீட்.. தேமுதிகவுக்கு அதிமுக பெப்பே… எடப்பாடியார் தந்த பொளேர் பதில்

ராஜ்யசபா சீட்.. தேமுதிகவுக்கு  அதிமுக பெப்பே… எடப்பாடியார் தந்த பொளேர் பதில்

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தங்களுக்கு ஒரு சீட் தர வேண்டும் என்ற தேமுதிகவின் கோரிக்கையை அதிமுக நிராகரிக்கக் கூடும் என்றே தெரிகிறது.

தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி. பதவி இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26-ல் நடைபெறுகிறது. தமிழக சட்டசபையில் தற்போதைய பலத்தின் படி அதிமுக, திமுகவுக்கு தலா 3 ராஜ்யசபா எம்.பி.க்கள் கிடைப்பது உறுதி.

இதில் அதிமுக கோட்டாவில் தங்களுக்கு ஒரு சீட் வேண்டும் என்பது தேமுதிக எதிர்பார்ப்பு. இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், கூட்டணியின் போதே ஒரு ராஜ்யசபா சீட் குறித்து பேசியிருந்தோம். அதனால் அதிமுக நல்ல முடிவை தெரிவிக்கும் என கூறியிருந்தார்.

இந்நிலையில் திருச்சியில் இன்று செய்தியாளர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அப்போது தேமுதிகவின் கோரிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ராஜ்யசபா சீட் கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை இருக்கிறது. அதனால் கேட்கிறார்கள். ஆனால் அதிமுக தலைமைதான் இறுதி முடிவு எடுக்கும் என்று பட்டும்படாமல் கூறிவிட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்