தமிழக அரசின் ரூ 1000 நிவாரணம் எந்தெந்த பகுதிகளில் கிடைக்கும்?.. 4 மாவட்ட மக்களின் கவனத்திற்கு.

தமிழக அரசின் ரூ 1000 நிவாரணம் எந்தெந்த பகுதிகளில் கிடைக்கும்?.. 4 மாவட்ட மக்களின் கவனத்திற்கு.

முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட 4 மாவட்டங்களில் தமிழக அரசின் ரூ 1000 நிவாரணம் எந்தெந்த பகுதிகளில் கிடைக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள் மக்களே.

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் 12 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை அடுத்து மேற்கண்ட 4 மாவட்டங்களில் வசிக்கும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 1000 நிவாரணம் உதவி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார்.

அதன்படி இன்று நிவாரண உதவி வழங்கும் பணி தொடங்கியது. வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை பணியாளர்கள் இந்த எந்தெந்த பகுதிகளில் இந்த உதவித் தொகை கிடைக்கும் என்பதை பார்ப்போம்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகள், மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சிகள் மற்றும் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகள்.

இதுதவிர மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக தமிழக அரசு வழங்குகிறது. தொகையை வழங்கி வருகிறார்கள்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்