4 கொள்ளையர்களுக்கு இரட்டை ஆயுள்

4 கொள்ளையர்களுக்கு இரட்டை ஆயுள்

ஒசூர்:

ஒசூர் அருகே, பெண்ணை பிளாஷ்டிக் டேப் ஒட்டி கொலை செய்த வழக்கில் 4 கொள்ளையர்களுக்கு இரட்டை ஆயுளுடன் 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஒசூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கலுக்கொண்டப்பள்ளி என்னும் கிராமத்தில் வீட்டில் இரண்டு பெண்கள் இருப்பதை நோட்டமிட்ட பெங்களூரை சேர்ந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல், வங்கியிலிருந்து வந்திருப்பதாக கூறி வீட்டினுள் நுழைந்து உள் தாளிட்டு நகை,பணம் உள்ளிட்டவையை கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

வீட்டில் இருந்த சகிதா பாணு, அலியா பாணு ஆகிய இருவரில் சகிதா பாணு தொடர்ந்து கூச்சலிட்டதால் சத்தம் போடாமல் இருக்க வாயில் ஒட்ட வேண்டிய பிளாஷ்டிக் டேப் மூக்கிற்கும் சேர்த்து ஒட்டப்பட்டு வீட்டின் பீரோவிலிருந்து 23 சவரண் தங்கநகைகளை 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் திருடிசென்றுள்ளது.

இதில் பிளாஷ்டிக் டேப் ஒட்டப்பட்ட சமிதா பாணு மூச்சுத்திணறி உயிரிழந்த கொலை சம்பவம் குறித்து 2009 ல் நடந்த இச்சம்பவத்தில் மத்திகிரி போலிசார் பெங்களூரை சேர்ந்த 6 பேர்க்கொண்ட கொள்ளை கும்பலை கைது செய்திருந்தது.

இதில் தீபக் என்பவர் 18 வயதிற்கும் குறைவானர் என்பதால் அவரது வழக்கு கிருஷ்ணகிரி சிறுவர் நீதிமன்றத்திலும் 5 பேரின் வழக்கு ஒசூர் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த வழக்கில் ஜோதிஸ் என்பவர் 2014 ஆம் ஆண்டு உயிரிழந்து விட மஞ்சுநாத், சுனில், வினய், ஜகதீஷ் ஆகிய 4 பேருக்கு இரட்டை ஆயுளுடன் கூடுதலாக 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் நான்கு பேருக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் அபராதம் கட்ட தவறியோருக்கு 6 மாத காலம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமென நீதிபதி அசோகன் பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளார்.

தண்டனை விதிக்கப்பட்ட பெங்களூரை சேர்ந்த 4 கொள்ளையர்களும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்