டாக்டர்கள் தொட்டுக்கூட சிகிச்சை அளிக்காத கொடுமை

டாக்டர்கள் தொட்டுக்கூட சிகிச்சை அளிக்காத கொடுமை

இறந்த குழந்தையை கட்டிப்பிடித்து கொண்டு தாய்-தந்தை கதறி அழும் காட்சி காண்போரை பதற வைத்து வருகிறது.. “என் குழந்தையை தொட்டு பார்த்துகூட டாக்டர்கள் வைத்தியம் பார்க்கலையே” என்று அந்த ஏழை பெற்றோரின் கதறலுடன் அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

உத்தரப் பிரதேசம் கன்னவ்ஜ் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. அந்த இளம் தம்பதியின் பெயர் பிரேம்சந்த், ஆஷாதேவி.. இவர்களது ஒரு வயது குழந்தைக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தது.

காய்ச்சல், கழுத்து வீக்கம் என்று திடீரென வந்துவிட்டது.. அதனால், அரசு ஆஸ்பத்திரிக்கு அவசர அவசரமாக தூக்கி கொண்டு ஓடினர். ஆனால், குழந்தையை பார்த்ததுமே டாக்டர்கள் தொட மறுத்துவிட்டனர்..மேலும் கான்பூருக்கு எடுத்து செல்லுங்கள் என்றும் சொல்லி உள்ளனர். இதனால் பெற்றோர் ஆஸ்பத்திரியில் கதறி துடித்துள்ளனர்.

அங்கிருந்த பொதுமக்களில் சிலர் இதை வீடியோவாகவும், போட்டோவாகவும் எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.. இதை பார்த்த டாக்டர்கள், வேறு வழியின்றி குழந்தையை அனுமதித்துள்ளதாக தெரிகிறது. ஆனால், அதற்குள் குழந்தை இறந்துவிட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அந்த குழந்தையை வாரியணைத்து கொண்டு அழுதனர்.. இது அத்தனையும் வீடியோவாக வெளிவந்துள்ளது.. மாலை 4.45 மணியளவில் இந்த தம்பதியினர் இங்குமங்கும் ஆஸ்பத்திரிக்குள் ஓடுகிறார்கள்.. அல்லாடுகிறாரகள்.. பிறகு இறந்த குழந்தையை கட்டிப்பிடித்து புரண்டு அழுகிறார்கள்.

இதையும் பலர் வீடியோ எடுத்தனர். இன்னொரு வீடியோவில், குழந்தைக்கு எமர்ஜென்சி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது போல உள்ளது. இந்நிலையில், கான்பூருக்கு குழந்தையை கொண்டு செல்லும்படி நாங்கள் சொல்லவே இல்லை என்று ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுக்கிறது.. அதேபோல, இது ஆஸ்பத்திரியின் அலட்சியம் இல்லை என கன்னவ்ஜ் மாவட்ட நிர்வாகமும் மறுத்துள்ளது.

ஆனால், குழந்தையை பறிகொடுத்தவர்களோ, “நிறைய பேர் வந்து வீடியோ எடுத்தாங்க.. அதுக்கப்பறம்தான் பயந்துபோய் டாக்டர்கள் அட்மிட் செய்தாங்க.. ஆனால் குழந்தையை தொட்டுக்கூட பார்க்கல.. அரை மணி நேரம் தவிச்சிட்டோம்.. எங்களை கான்பூருக்கு போங்க-ன்னு சொல்றாங்களே, நாங்க ஏழை.. கையில் காசு இல்லை.. எப்படி உடனே கான்பூருக்கு போக முடியும்” என்று கண்ணீர் மல்க கூறுகிறார்கள்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்