மனித வடிவில் ஆட்டுக்குட்டி; தர்மபுரியில் அதிசயம்

மனித வடிவில் ஆட்டுக்குட்டி; தர்மபுரியில் அதிசயம்

பாப்பாரப்பட்டி:

தர்மபுரி அருகே உள்ள பாலவாடி கிராமத்தில் விவசாயி ஆட்டுக்குட்டி மனித வடிவில் பிறந்துள்ள அதிசயம் நிகழ்ந்துள்ளது.

தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம் பாலவாடி கிராமத்தில் வசிப்பவர் ராஜம்மாள் இவரது கணவர் முருகேசன் என்பவருக்கு சொந்தமான வெள்ளாடு நிறைமாதமாக இருந்துள்ளது. பிரசவவலி ஏற்பட்டதை தொடர்ந்து கால்நடை மருத்துவர் கே.தசரதன் வந்து ஆட்டுக்குட்டிக்கு பிரசவம் பார்த்தார்.

அப்போது மனித உருவத்தை போன்ற முகம் கொண்ட உடல் முழுவதுமாக நீர்நிறைந்த ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்தது. இந்த ஆட்டுக் குட்டியின் எடை சுமார் 10 கிலோ ஆகும்.

இந்த ஆட்டுக்குட்டியின் உடல் முழுவதுமாக நீர்நிறைந்த உருவத்தில் பெரிதாகவும் பார்ப்பதற்கு பலூன் போன்ற அமைப்பில் இருந்தது. வெள்ளாட்டினை கால்நடை மருத்துவர் தசரதன் குட்டியை எடுத்து ஆட்டின் உயிரை காப்பாற்றினார்.

இது தொடர்பாக கால்நடை மருத்துவர் கூறியதாவது:

இது போன்ற ஆடு குட்டியை ஈன்றுவது மிகவும் அரிதானவை. இதனை அனாசர்க்கா என்று அழைக்கப்படுவார் உடல் முழுவதுமாக நீர் போட்டு தோல் மற்றும் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளிலும் நீர் அதிகமாக கோர்வையாக ஏறி உருவம் பெருத்து காணப்படும். இதனால் ஆடு எளிதில் ஈன்றெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அதிசய ஆட்டுக்குட்டியை ஈன்ற ஆட்டினை அருகில் இருக்கும் கிராம மக்கள் வந்து ஆர்வமாக பார்த்து செல்கின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்