கொரோனோ அச்சுறுத்தல : தினசரி நாளிதழ் வாங்கலாமா…? வேண்டாமா…?

கொரோனோ அச்சுறுத்தல : தினசரி நாளிதழ் வாங்கலாமா…? வேண்டாமா…?

கொரோனோ வைரஸ் பாதிப்பால் மக்கள் தினசரி நாளிதல் வாங்கலாமா, அல்லது இதன் மூலம் கொரோனோ பரவி விடுமோ என்ற பயத்துடன் இருக்கின்றனர்.

நாடுமுழுவதும் ஊரடங்கு, மக்கள் யாரும் வெளியில் நடமாட்டமில்லா இச்சூழலில் தொலைக்காட்சியும், நாளிதழ்களும் தினசரி கொரோனோ பாதிப்புகள், அரசு அறிவிப்புகள் உள்ளிட்டவற்றை மக்களுக்கு தெரியப்படுத்தி வருகிறது.

கொரோனோ பாதிப்பு வீரியம் அடைந்த இச்சூழலில் சமூக பரவலை தடுக்க நாம் அன்றாட வாங்கிப்படிக்கும் தினசரி நாளிதழ்கள் மூலம் கொரோனோ தொற்று வந்துவிடுமோ என அனைத்து மக்களும் அச்சப்படுகின்றன. இதற்கு பிரபல நாளிதழ் (தினமலர்) அச்சக தொழில்நுட்ப பிரிவு மேலாளரை தொடர்பு கொண்டோம்.

அப்போது எங்கள் நிறுவனத்தின் அச்சக பிரிவில் உள்ள அனைத்து செயல்பாடுகளும் செய்தியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு புரோகிராம் மூலம் கணிணியில் பதிவேற்றப்பட்டு இயந்திரங்கள் மூலம் மட்டுமே அச்சப்பதிவு நடைபெறுகிறது.

பேப்பர் ஏற்றப்பட்டு அச்சிட்டு வெளியில் வரும் போது கொரோனோ வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பேப்பர் முழுவதும் கிரிமி நாசினி தெளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அச்சகங்களிலும் முழு பாதுகாப்புடன் பேப்பர்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க ஊழியர்கள் கொரோனோ விழிப்புணர்வுடன் கையில் உறை, கிரிமி நாசினி, மாஸ்க் என அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையுடன் செயல்படுவதாகவும், வாகனங்கள் முழுவதும் கிரிமி நாசினி தெளிக்கப்படுகிறது. இல்லத்திற்கு முழு பாதுகாப்புடன் நாளிதழ்கள் கொண்டு சேர்ப்பதாகவும் இதனால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.மேலும் ஊரடங்கு உத்தரவால் பயணங்களின் போது விற்கப்படும் வியாபாரங்களை தவிர இல்லத்திற்கு வழங்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சந்தாதாரர்களுக்கு தொடர்ந்து வினியோகிக்கப்பட்டு வருவதாகவும், சுமார் 10 சதவிகிதம் விற்பனை வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்