பயிர்கள் நாசம்; இழப்பீட்டுக்கு கோரிக்கை

பயிர்கள் நாசம்; இழப்பீட்டுக்கு கோரிக்கை

ஓசூர்:

தொடர் மழையால் அறுவடைக்கு தயாராகி இருந்த ராகி பயிர்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை,சூளகிரி,கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ராகி அன்றாட விவசாய பயிராகி இருந்து வருகிறது.

சுமார் 4000 ஹெக்டேர் நிலப்பரப்பில் இந்தாண்டு ராகி விவசாயம் செய்யப்பட்டு, நல்ல விளைச்ணலாக அறுவடைக்கு தயாராகி வந்தது.

பல்வேறு பகுதிகளில் அறுவடையும் செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் நனைந்து ராகி பயிர்கள்,கதிர்கள் நாசமடைந்துள்ளன.

அதிகப்படியான மழை இல்லாவிட்டாலும் லேசாக தொடர்ந்து பெய்ததினாலே பயிர் சாய்ந்து கதிர்கள் அறுவடை செய்யமுடியாத அளவிற்கு வயலிலேயே நாசமடைந்துள்ளது.
ராகியை மட்டுமே விவசாயம் செய்யும் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்திருப்பதால் தமிழக அரசு உரிய இழப்பீட்டை வழங்கிட முன்வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்