இளைஞர்களை குறிவைக்கும் COVID-19 – இந்தியாவில் தீவிரமாக பரவுகிறது: WHO கவலை

இளைஞர்களை குறிவைக்கும் COVID-19 – இந்தியாவில் தீவிரமாக பரவுகிறது: WHO கவலை

கோவிட் -19 நோய்தொற்று இந்தியாவின் நகரங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு பரவுகிறது என்று உலக சுகாதார அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். ஒருவேளை கிராமப்புறங்களில் (Rural Areas) பரவத் தொடங்கினால் எளிதில் கொரோனா (COVID-19) பாதிப்பு அதிகமாகிவிடக்கூடும். இதனால் அதிக இறப்பு விகிதம் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

WHO இன் அவசரகால நிர்வாகத் தலைவரான மைக் ரியான் (Mike Ryan) வீடியோ இணைப்பு மூலம் வாராந்திர பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அப்பொழுது அவர், இந்தியாவில் இளைய வயதினர் (Younger age Groups) இடையே கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.இதனை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும் என்றும், கொரோனாவுக்கு எதிரான சிகிச்சையை இந்தியா தீவிரப்படுத்த வேண்டும் எனவும் கூறினார்.

ALSO கொரோனாவுக்கு பிளாஸ்மா தெரபி மூலம் சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவு

மேலும் பேசிய அவர், “இந்த நோயைப் பொறுத்தவரை இந்தியா சவாலை எதிர்கொள்கிறது. இந்தியாவில், கடந்த ஒரு வாரத்தில் 35% நோய்தொற்று அதிகரித்துள்ளன. மேலும் 25% க்கும் அதிகமான இறப்புகள் (25% increase in deaths) ஏற்பட்டுள்ளன என்று ரியான் கூறினார்.

“இந்தியா உண்மையில் அதிக அளவில் சோதனை மேற்கொள்ள முயற்சிக்கிறது. ஒரு நாளைக்கு மில்லியன் சோதனைகளை இலக்காகக் கொண்டுள்ளது. இது மிகப்பெரிய இலக்காகும். ஆனால் இந்த சோதனைகள் ஆமை வேகத்தில் நடைபெறுகிறது. இதில் கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், நேர்மறை விகிதம் (Positivity Rate) தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது இந்தியாவில் அது சுமார் 12.5 சதவீதம் ​ அதிகரித்துள்ளது. எனவே, நோய் தீவிரமாக பரவுகிறது என்பதை இது நிரூபிக்கிறது எனக் கூறினார்.

அடிக்கடி கைகளை கழுவுதல், முகமூடி (Face mask) அணிவது, உடல் ரீதியான விலகல் மற்றும் நோயை எதிர்த்துப் போராடுவது போன்ற அடிப்படை நடவடிக்கைகளை அமல்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு அனைத்து நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தது.

ஆகஸ்ட் 3 ம் தேதி இந்திய அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள், நாட்டில் 579,357 கோவிட் -19 தொற்று மற்றும் 38,135 பேர் இறந்துள்ளனர்.

ஒவ்வொரு நாளும் சராசரியாக 381,027 கொரோனா வைரஸ் சோதனைகள் நடத்தப்படுகின்றன. புதிய வைரஸ் பாதிப்பு பெரும்பாலானவை தமிழ்நாடு (Tamil Nadu), ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள நகரங்களில் இருந்து பதிவாகின்றன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்