கொரோனா வைரஸ்; சவுதியில் இந்திய நர்ஸ் பாதிப்பு

  • In General
  • January 23, 2020
  • 191 Views
கொரோனா வைரஸ்; சவுதியில் இந்திய நர்ஸ் பாதிப்பு

புதுடெல்லி:

சவூதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் ஒருவருக்கு கொரோனா கொடிய வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் ‘கொரோனா’ கொடிய வைரஸ் பாதிப்பால் மக்கள் கடுமையான பாதிப்பு க்குள்ளாகியுள்ளனர். இந்த வைரஸ் தாக்கம் மற்ற நாடுகளிலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து சவுதி அரேபியா மருத்துவமனையில் பணிபுரியும் சுமார் 100 இந்திய நர்சுகள் பரிசோதிக்கப்பட்டத £கவும், அவர்களில் ஒருவர் கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமை ச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன் தனது டிவிட்டர் பதிவில், கேரளாவிலிருந்து சுமார் 100 இந்திய நர்சுகள், அல்-ஹயாத் மருத்துவமனையில் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு ‘கொரோனா வைரஸ் பாதிக்கப்பட் டுள்ளதாக என சோதனை செய்யப்பட்டது. அதில் ஒரு நர்சுக்கு மட்டம் வைரஸ் ப £திப்பு இருந்தது தெரியவந்தது. சிகிச்சையில் நன்றாக குணமடைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்