காங்., தலைவராக மீண்டும் ராகுல்

காங்., தலைவராக மீண்டும் ராகுல்

புதுடெல்லி:

வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் ராகுல்காந்தி தலைவராக தேர்வுசெய்யப்பட்டுவிடுவ £ர் என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி காரணமாக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். பிரியங்கா காந்தி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர் எவ்வளவோ சமாதானம் செய்தும் அதனை ராகுல் கா ந்தி ஏற்கவில்லை.

தொடர்ந்து ராகுலுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சோனியா காந்தி செயல் தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது உடல்நிலை சரியில்லாத சோனியா காந்தி கட்சி பணிகளை கவனிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

எனவே விரைவில் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. ராகுல்காந்தி மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதையே பெரும்பாலான தலைவர்கள் விரும்புகிறார்கள். ராகுல்கா ந்தியை மட்டுமே மக்கள் ஏற்பார்கள். மற்றவர்கள் கட்சிக்கு செல்வாக்கு பெற இயலாது என கருதுகின்றனர்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக்லொட் உள்ளிட்ட தலைவர்கள் தற்போது தலைவர் பதவிக்கு வரவேண்டும் என தொடர்ந்து அழைப்பு விடுத்தன்பேரில், ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அவரை முறைப்படி தலைவராக தேர்வு செய்ய உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மாநாடு அடுத்த மாதம் இறுதியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்தப்பட இரு க்கிறது. அதில் புதிய தலைவரை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.

ஏப்ரல் 15-ம் தேதிக்குள் ராகுல்காந்தி தலைவராக தேர்வு செய்யப்பட்டு விடுவார் என காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்