சிவில் சர்வீசஸ் தேர்வில் விவசாயம் பற்றிய கேள்விகள்

சிவில் சர்வீசஸ் தேர்வில் விவசாயம் பற்றிய கேள்விகள்

துடில்லி: ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பணியிடங்களுக்காக, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வுகள் நேற்று நடந்தன. இதில், வேளாண் துறை குறித்த கேள்விகள் இடம்பெற்றிருந்தன.சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு, நேற்று நாடு முழுதும் நடந்தது. இதை, 10.58 லட்சம் பேர் எழுதியுள்ளனர். இந்த முதன்மை தேர்வு கேள்வித்தாள், கடந்த ஆண்டை விட, சற்று எளிதாக இருந்ததாக, தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர் தெரிவித்து உள்ளனர். நடப்பு விவகாரங்கள் தொடர்பான பொது அறிவு கேள்விகளில், பொருளாதாரம், அறிவியல் குறித்த கேள்விகள் இடம் பெற்றிருந்தன.வேளாண் துறை சார்ந்த கேள்விகள் அதிக அளவில் இருந்தன.குறைந்தபட்ச ஆதார விலை, வேளாண் பொருள்கள் கொள்முதல், இயற்கை வேளாண்மை குறித்த கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பெரும்பாலான கேள்விகள், அது தொடர்பான அறிவை பரிசோதிப்பதைவிட, செயல்பாட்டுடன் தொடர்புடையதாக இருந்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர். கொரோனா வைரஸ் பரவல் உள்ளதால், தேர்வு எழுதுவதற்கான வசதிகள் மிகச் சிறந்த முறையில் செய்யப்பட்டிருந்ததாகவும், தேர்வு எழுதியோர் கூறினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்