சென்னையில் பரபரப்பு

சென்னையில் பரபரப்பு

சென்னை பெரியமேடு பகுதியில் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

சென்னையில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகப்படியாக இருப்பதால் சுகாதாரத்துறைக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை அதிகமாக தேவைப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு பணி செய்ய வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், “வெறும் 26 நாட்கள் மட்டும் நீங்கள் பணி செய்தால் போதும் என்று கூறி எங்களை அழைத்து வந்து பணி புரிய வைத்தனர்

எங்களுக்கு சரியான உணவு, ஓய்வு கொடுக்காமல் பணிபுரிய கட்டாயப்படுத்துகின்றனர். மேலும் எங்களை சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.” என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் மேலாளர் உங்களுடைய கோரிக்கை மூன்று நாட்களில் நிறைவேற்றப்படும் என்று கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், அவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்