CBSC தேர்வில் 100% மதிப்பெண் வாங்கிய மத்தியபிரதேச மாணவி

CBSC தேர்வில் 100%  மதிப்பெண் வாங்கிய மத்தியபிரதேச மாணவி

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதன்படி, வெளியான தேர்வு முடிவுகளில் 88.78 சதவீதத்தினர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவற்றில் திருவனந்தபுரம், பெங்களூர் ஆகிய நகரங்கள் இந்தியாவிலேயே அதிகபட்ச தேர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. அங்கு 97 சதவீதத்தினர் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், சி.பி.எஸ்.இ. தேர்வில் திவ்யன்ஷி ஜெயின் என்ற மாணவி 100% மதிப்பெண் வாங்கியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த மாணவி திவ்யான்ஷி ஜெயின், மொத்தமுள்ள 600 மதிப்பெண்களையும் எடுத்துள்ளார்.

நவ்யூக் ரேடியன்ஸ் சீனியர் பள்ளியைச் சேர்ந்த இந்த மாணவி, ஆங்கிலம், சமஸ்கிருதம், வரலாறு, புவியியல், இன்சூரன்ஸ் மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடங்களில் தேர்வு எழுதி இருந்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்