மெரீனாவில் ‘புளூ’.. குளிப்பது ஆபத்தா?

மெரீனாவில் ‘புளூ’.. குளிப்பது ஆபத்தா?

சென்னை:

சென்னை மெரினாவில் கடலின் நிறம் மாறி காணப்பட்டதால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. கடலில் குளிப்பதும், கடல் உணவை சாப்பிடுவதும் ஆபத்து என ஆராய்ச்சியாளர்கள் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேராசிரயரும், சுற்றுச்சூழல் ஆராய்சியாளருமான அசோக சக்ரவர்த்தி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், கடல் நீல நிறமாக மாறியிருப்பது நமக்கு அரிய சம்பவம் எனவும், இது இயற்கையாக நடக்கக்கூடிய சம்பவம் என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிறம் மாற்றத்திற்கு டைனோ கிளாஜிலேட்டின் காரணமாகும். நடப்பாண்டின் ஜூலை மாதம் தான் உலகத்திலேயே வெப்பம் மாதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே கடல் நீரின் வெப்பம் அதிகரிப்பு காரணமாக இந்த நிறமாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதற்கு ஆல்கம் புளூம் என்று இதனை சொல்வார்கள்.

பகல் நேரத்தில் கடல் நீர் சிவப்பு நிறத்தில் காணப்படும். இரவு நேரத்தில் ‘நியோ புளு’ என்று சொல்லக்கூடிய பளபளவென மின்னக்கூடிய நீல நிறத்தில் கடல் நீர் காணப்படும். இந்த கலர் ஒரு மாதமோ அல்லது ஒரு வாரமோ இருக்கலாம். இதனால் மனிதருக்கு எந்த ஆபத்தும் கிடையாது எனவும், இந்த நேரத்தில் குளிக்காமல் இருப்பதும், ஒரு வாரத்திற்கு கடல் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது; அது பெரும் பாதிப்பை ஏதும் ஏற்படுத்தாது எனவும் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்