பா.ஜ.,வினர் பாதையாத்திரை

பா.ஜ.,வினர் பாதையாத்திரை

ஒசூர்:

ஓசூர் வழியாக செல்லும் தென்பெண்ணை ஆற்று உபரிநீரை ஏரிகளுக்கு நிரப்ப வலியுறுத்து பாஜகவினர் கவன ஈர்ப்பு பாதையாத்திரையில் ஈ டுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணை க்கு கர்நாடக மாநிலம் நந்திமலை பகுதியில் உற்ப்பதியாகும் தென்பெண்ணை ஆறு மூலமாக நீர் வந்துக்கொண்டிருக்கிறது.

இந்த நீர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து சானமாவு வனப்பகுதி வழியாக கிருஷ்ணகிரி அணைக்கு சென்று பல்வேறு மாவட்டங்களை அடைகிறது.

அவ்வாறு செல்லும் அணையின் உபரிநீரை, கெலமங்கலம் அடுத்த சின்னட்டி சிற்றாரில் இணைப்பதால் அருகில் உள்ள ஏரிகள் நிரம்பும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து 25000 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று, குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என வலியுறுத்தி அக்கொண்டப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாச ரெட்டி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க காருக்கொண்டப்பள்ளி இரயில்வே நிறுத்தகத்திலிருந்து தேன்கனி க்கோட்டை வரையிலும் பாதையாத்திரையாக சென்று தேன்கனிக்கே £ட்டை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இந்த பாதையாத்திரையில் பாஜக மாநில பொதுச்செயலாளர் நரேந்திரன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்