கர்நாடக இடைத்தேர்தல்: பா.ஜ., 9 தொகுதி முன்னிலை

கர்நாடக இடைத்தேர்தல்: பா.ஜ., 9 தொகுதி முன்னிலை

பெங்களூரு:

கர்நாடகாவின் 15 தொகுதிகள் இடைத்தேர்தலில் 9 தொகுதிகளில் பா.ஜ., முன்னிலை வகிக்கிறது.

கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. குமாரசாமி ஆட்சி கவிழ்ப்புக்கு காரணமான தகுதி நீக்க 15 எம்எல்ஏக்களின் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இதில் பா.ஜ., 9 இடங்களிலும், காங்கிரஸ், ம.ஜ.த., 2 இடங்களிலும், சுயேச்சை 1 இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.

கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவைப்படும் நிலையில், பா.ஜ.,வுக்கு தற்போது கைவசம் 106 உள்ளது. இந்நிலையில், 15 தொகுதியின் இடைத்தேர்தலில் 9 இடங்களில் பா.ஜ., முன்னிலை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்