கறி வியாபாரிகளுக்கு கட்டை, கத்தி

  • In Cinema
  • September 30, 2019
  • 1159 Views
கறி வியாபாரிகளுக்கு கட்டை, கத்தி

கோவை:

பிகில் படத்தின் போஸ்டருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு கறி வெட்டும் கட்டை மற்றும் கத்தியை விஜய் ரசிகர்கள் வழங்கி சமாதானம் செய்தனர்.

நடிகர் விஜய் நடிக்கும் ‘பிகில்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கறிவெட்டும் கட்டையின் மீது செருப்பு அணிந்து கால் வைத்திருப்பது போன்று வெளியிடப்பட்டது. இந்த போஸ்டர் இறைச்சி வியாபாரிகளை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளதாக இறைச்சி வியாபாரிகள் கோவை கலெக்டரிடம் புகார் அளித்திருந்தனர்.

இந்த பிரச்சனை சமாதானம் செய்யும் வகையில், கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பாக, இறைச்சி வியாபாரிகளுக்கு கறி வெட்டும் கட்டை மற்றும் கத்தியை இலவசமாக வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து பிகில் படத்திற்கு எதிரான போராட்டங்களை இனி செய்ய மாட்டோம் என இறைச்சி வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்