பாகலூரில் முதன்முறையாக ஒகேனக்கல் கூட்டுநீர் விநியோகம்: ஊராட்சி மன்ற தலைவருக்கு கிராமமக்கள் பாராட்டு

பாகலூரில் முதன்முறையாக ஒகேனக்கல் கூட்டுநீர் விநியோகம்: ஊராட்சி மன்ற தலைவருக்கு கிராமமக்கள் பாராட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சுற்றுப்பகுதிகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் மே 29, 2013 ஆம் ஆண்டு துவங்கி வைக்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் குடிநீரில் புளோரைடு அளவு அதிகமாக இருப்பதால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதை தவிர்க்கவும் இத்திட்டம் மேற்க்கொள்ளப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் பல கிராமங்கள் பயன்பெற்று வரும்நிலையில், இதுநாள் வரையில் ஒசூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாகலூரில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் கிடைக்காமல் அரசிற்கு கோரிக்கை விடுத்து வந்தநிலையில்

பாகலூர் ஊராட்சி மன்றத்தலைவர் VD.ஜெயராம் அவர்களின் முன் முயற்சியால் இன்று முதல் பாகலூரில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் விநியோகத்தை ஜெயராம் அவர்கள் துவக்கி வைத்தார்.

7 ஆண்டுகளாக இருந்த பாகலூர் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய பஞ்சாயத்து தலைவரை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பாகலூர் பஞ்சாயத்து துணை தலைவர் சீனிவாச ரெட்டி, கவுன்சிலர்கள் முனிரத்னா முனிராஜ்,உமா குணசேகரன் மற்றும் அதிமுகவினர் பொதுமக்கள் எற ஏராளமானோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்