ATM கட்டணங்கள் நினைவிருக்கா? இன்று முதல் மீண்டும் கட்டண விதிகள் அமல்!

ATM கட்டணங்கள் நினைவிருக்கா? இன்று முதல் மீண்டும் கட்டண விதிகள் அமல்!

உலகத்தையே உலுக்கி எடுத்துக் கொண்டு இருக்கும், கொடிய கொரோனா வைரஸ் காலத்தில், மக்கள் சிரமப்படக் கூடாது என்கிற நோக்கில், அரசு, வங்கி தொடர்பாக சில சலுகைகளை அறிவித்தது.

ATM இயந்திரங்களில் இருந்து எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகை (Minimum Balance) வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று எல்லாம் சொல்லி இருந்தார்கள்.

அப்படி அதிக முறை ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் எடுப்பது மற்றும் குறைந்தபட்சம் பேலன்ஸ் வைத்துக் கொள்ளாததற்கு எந்த அபராதம் & கட்டணம் வசூலிக்கப்படாது எனச் சொல்லி இருந்தார்கள்.இன்று முதல் அமல்

இந்த 01 ஜூலை 2020 முதல் மீண்டும் பழைய படி, ஏடிஎம் கட்டணங்கள் மற்றும் மினிமம் பேலன்ஸ் கட்டணங்கள் அமலுக்கு வந்துவிட்டது எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.எனவே, இன்று முதல் மீண்டும் பழைய விதிமுறைகள் எல்லாம் அமலுக்கு வரப் போகிறது தெரியுமா..?

ATM கட்டணங்கள்

பொதுவாக, எந்த வங்கியில் இருந்து ஏடிஎம் கார்ட் வாங்கி இருக்கிறோமோ, அந்த வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில், 5 முறை வரை இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். 3 முறை மற்ற வங்கி ஏடிஎம் இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்தினால் 8 ரூபாய் முதல் 20 ருபாய் வரை நாம் செய்யும் பரிமாற்றங்களைப் பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும்.

மினிமம் பேலன்ஸ் ஜாக்கிரதை

ஒவ்வொரு வங்கியும், தங்களுக்கு ஏற்றாற் போல, மினிமம் பேலன்ஸை நிர்ணயித்து இருக்கிறார்கள். ஒரு மாதத்தில் அந்த குறிப்பிட்ட தொகை மினிமம் பேலன்ஸாக கணக்கில் இல்லை என்றால், அபராதம் அல்லது கட்டணத்தை ஜூலை மாதத்துக்கு வசூலிப்பார்கள். எனவே மினிமம் பேலன்ஸை மனதில் வைத்துக் கொண்டு வங்கிக் கணக்கில் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள். எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு மினிமம் பேலன்ஸ் கட்டணம் வசூலிக்கப்படாது என மார்ச் 2020-ல் சொன்னது இங்கு குறிப்பிடத்தக்கது. மற்ற வங்கி வாடிக்கையாளர்கள் உஷாராக இருங்கள்.

மியூச்சுவல் ஃபண்ட்களுக்கு ஸ்டாம்ப் டியூட்டி

இந்த ஏடிம் & மினிமம் பேலன்ஸ் கட்டணங்கள் போக, 01 ஜுல்லை 2020 முதல், ஈக்விட்டி, கடன், ஹைப்ரிட் என எல்லா வகையான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு 0.005 % முத்திரைத் தாள் கட்டணம், மியூச்சுவல் ஃபண்ட்களை டிரான்ஸ்ஃபர் செய்ய 0.015 % முத்திரைத் தாள் கட்டணம் வசூலிக்க இருக்கிறார்களாம்.

பென்ஷன் திட்டம் ஆட்டோ டெபிட்

அது போக அதல் பென்ஷன் யோஜனா திட்டத்துக்கு வழக்கம் போல, ஆட்டோ டெபிட் செய்யப்படும் தொகையும், மீண்டும் 01 ஜூலை 2020 முதல் வசூலிக்கப்படுமாம். இதெல்லாம் போக, நாம் சேமிப்பு கணக்கில் வைத்திருக்கும் பணத்துக்கு கொடுக்கும் வட்டியையும் பல வங்கிகள் கணிசமாக குறைத்து இருக்கிறார்கள். உதாரணமாக பஞ்சாப் நேஷனல் பேங்கில் சேமிப்பு கணக்குக்கான வட்டித் தொகையை 3%-ல் இருந்து 2.5 சதவிகிதமாக குறைத்து இருக்கிறார்கள்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்