தொடங்கியது ஆட்டம்.. 107 எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் தங்கவைப்பு.. ஆட்சியை காக்க அசோக் கொலட் மும்முரம்!

தொடங்கியது ஆட்டம்.. 107 எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் தங்கவைப்பு.. ஆட்சியை காக்க அசோக் கொலட் மும்முரம்!

ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரிசார்ட் அழைத்து செல்லப்படுகிறார்கள். முதல்வர் அசோக் கொலட் ஆதரவு எம்எல்ஏக்கள் எல்லோரும் ரிசார்ட்டில் தங்க வைக்கப்படுகிறார்கள்.

ராஜஸ்தான் அரசியலில் அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் நடந்து வருகிறது. அங்கு துணை முதல்வர் சச்சின் பைலட் ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை அடுத்து அங்கு ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் அசோக் கொலட் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் சட்டசபையில் மொத்தம் 200 இடங்கள் உள்ளது. அங்கு ஆட்சி அமைக்க 101 இடங்கள் தேவை. தற்போது காங்கிரஸ் கட்சி அங்கு 124 இடங்கள் உடன் கூட்டணி ஆட்சி அமைத்து உள்ளதுகாங்கிரஸ் கட்சியில் 119 எம்எல்ஏக்கள் உள்ளனர். சிபிஐ கட்சிக்கு 2, ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு 1, பாரதிய டிரைபல் கட்சிக்கு 2 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சச்சின் பைலட் தனக்கு 30 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்று கூறியுள்ளார். ஆனால் களநிலவரத்தின்படி அவருக்கு 12-16 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் சச்சின் பைலட் டெல்லியில் முகாமிட்டு இருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கொலட் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் 107 பேர் கலந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது. 97 எம்எல்ஏக்கள், 102 எம்எல்ஏக்கள் என்று வெவ்வேறு தகவல்கள் வந்த நிலையில் தற்போது 107 எம்எல்ஏக்கள் அசோக் கொலட் ஆட்சிக்கு ஆதரவு தருவதாக கூறப்படுகிறது.இவர்கள் எல்லோரும் எழுத்து பூர்வமாக தங்கள் ஆதரவு கடிதத்தை கொடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் எல்லோரும் ரிசார்ட் அழைத்து செல்லப்படுகிறார்கள். முதல்வர் அசோக் கொலட் ஆதரவு எம்எல்ஏக்கள் எல்லோரும் இந்த அரசியல் பிரச்சனை முடியும் வரை ரிசார்ட்டில் தங்க வைக்கப்படுகிறார்கள்.107 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வரை ரிசார்ட் அழைத்து செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்