நடிகை நமீதா பா.ஜ.,வில் இணைவு

நடிகை நமீதா பா.ஜ.,வில் இணைவு

சென்னை:

சென்னையில் செயல் தலைவர் நட்டா முன்னிலையில், நடிகை நமீதா பா.ஜ.,வில் இணைந்தார்.

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை நமீதா, தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின், கட்சியிலிருந்து ஒதுங்கி இருந்த நமீதா, தற்போது ஜெ.பி.நட்டா முன்னிலையில் பா.ஜ., கட்சியில் இணைந்தார்.

உடன் கட்சியின் மூத்த தலைவர்களான பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, முரளிதர ராவ் ஆகியோர் உடனிருந்தனர்.

சென்னை வந்துள்ள பா.ஜ., கட்சியின் செயல் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில், ஏற்கனவே நடிகை ராதாரவி அதிமுகவிலிருந்து விலகி பா.ஜ.,வில்ல் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்