கையை பிடித்து இழுத்தார் எம்எல்ஏ மகன்

  • In Cinema
  • December 2, 2019
  • 65 Views
கையை பிடித்து இழுத்தார் எம்எல்ஏ மகன்

தெலங்கானா எம்எல்ஏ மகன் கையை பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சஞ்சனா போலீசில் புகாரளித்துள்ளார்.

தெலுங்கு பட நடிகை சஞ்சனா போலீசில் அளித்த புகாரில், ஐதராபாத்தில் இரவு கேளிக்கை விடுதிக்கு சென்றிருந்தபோது, தெலங்கானா எம்எல்ஏ., நந்நீஸ்வர் கவுடு மகன் ஆஷிஷ் கவுடு வந்திருந்தார்.

அங்கு எல்லோரும் மது அருந்திவிட்டு நடனம் ஆடிக்கொண்டிருந்தபோது, ஆஷிஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், இதனால் அதிர்ச்சியான சஞ்சனா அவர் பிடியில் இருந்து தப்பி வெளியே ஓடினார்.

பின்னர் மாதாபூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று ஆஷிஷ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார். புகாரையடுத்து எந்த நேரத்திலும் கைதாகலாம் என ஆஷிஷ் தலைமறைவாகிவிட்டார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்