விரைவில் கலக்க வரும் வைகைப்புயல் வடிவேலு

  • In Cinema
  • September 14, 2019
  • 213 Views
விரைவில் கலக்க வரும் வைகைப்புயல் வடிவேலு

தமிழ் திரையுலகில் காமெடி என்றால் அது வைகைப்புயல் வடிவேலுதான் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

அவர் கடந்த சில வருடங்களாகவே சரியாக படம் நடிக்காததால் அவரது ரசிகர்கள் பெருத்த ஏமாற்றமடைந்தனர்.

நடிகர் வடிவேலுவை வைத்து சமூக வலைதலங்களில் பல்வேறு மீம்ஸ்கள் வருகிறது. உலகில் நடக்கம் எல்லாம் விசயங்களுக்கும் கவுண்டர் கொடுக்கும் விதமாக அவரது புகைப்படங்கள் அமைந்துள்ளது.

இந்நிலையில், நடிகர் வடிவேலு தனியார் தொலைக்காட்சி ஒன்றிக்கு அளித்துள்ள பேட்டியில், என்னை பெற்ற தாய்க்கும், தாய்க்கு பின்னர் வாழவைத்துக் கொண்டிருக்கும் மக்கள் சக்திக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க்கையில் சனி இருக்கத்தான் செய்யும், என்னையும் விட்டு வைக்கவில்லை.
செப்டம்பர் இறுதிக்குள் அடுத்தப்படம் பற்றி அறிவிப்புகள் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

விரைவில் ரசிகர்களுக்கு காமெடி விருந்து இருக்கிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்