கொரோனா முடிந்ததும் சிம்புவிற்கு திருமணம், பெண் யாரு தெரியுமா?

  • In Cinema
  • June 7, 2020
  • 175 Views
கொரோனா முடிந்ததும் சிம்புவிற்கு திருமணம், பெண் யாரு தெரியுமா?

ரொம்ப நாட்களாக சரியாக ஷூட்டிங்கிற்கு போகாத சிம்பு வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த நேரம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால் ஐதராபாத்தில் நடைபெற்று வந்த ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு படக்குழு சென்னை திரும்பியது.

இந்நிலையில் நடிகர் சிம்புவுக்குத் திருமணம் பேசி முடிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் திருமணம் செய்துகொள்ள இருக்கும் மணமகள், லண்டனைச் சேர்ந்தவர் என்றும் செய்தி கசிந்துள்ளது. அந்தப் பெண் சிம்புவின் குடும்பத்தினருக்கு தூரத்து உறவினர் என்றும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் பிரச்னை முடிந்ததும் அவர் திருமணம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.சிம்புவுக்கும், அவர் உறவினருக்கும் விரைவில் திருமணம் என்று கடந்த ஆண்டு செய்தி வெளியானது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சிம்பு, தனக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டால் முறையாக அறிவிப்பேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அவர் திருமணம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்