எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் பட நடிகை உஷா ராணி காலமானார்..! திரையுலகினர் இரங்கல்..!

  • In Cinema
  • June 21, 2020
  • 40 Views
எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் பட நடிகை உஷா ராணி காலமானார்..! திரையுலகினர் இரங்கல்..!

எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல் ஆகிய உச்ச நடச்சத்திரங்களுடன் நடித்த, பிரபல நடிகை உஷா ராணி இன்று சென்னையில் சிறுநீரக பிரச்சனை காரணமாக காலமானார்.

சினிமா வாழ்க்கை..

தமிழில், அரங்கேற்றம், என்னைப் போல் ஒருவன், பட்டிக்காட்டுப் பொன்னையா, சிவந்த கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் நடிகை உஷாராணி. இவர் தன்னுடைய 12 வயதில் சினிமாவில் நடிக்கத் துவங்கினார். தமிழில் 50க்கும் மேற்பட்ட படங்களிலும், மலையாளத்தில் 200-க்கும் அதிகமான படங்களிலும், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் ஒருசில படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தவர் உஷாராணி.

காதல் திருமணம்..உஷா ராணியின் கணவர், பிரபல மலையாள இயக்குனர் என்.சங்கரன் நாயர். இவர் நடிகர் கமல்ஹாசன் மலையாளத்தில் நடித்த விஷ்ணு விஜயம், பிரமீளா நடித்த தம்புராட்டி, பிரேம் நஸிரின் தரு ஒரு ஜென்மம் கூடி உள்பட 40 படங்களை இயக்கியவர். உஷாராணி மலையாள படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது, சங்கரன் நாயரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சங்கரன், உஷாவை விட 30 வயது பெரியவர் என்பதால் 1972-இல் இந்த திருமணம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த தம்பதிக்கு விஷ்ணு என்ற மகன் இருக்கிறார். கடந்த 2005 -இல் உடல்நலக் குறைபாடு காரணமாக சங்கரன் நாயர் காலமானர்.

உடல்நலம்…

இவருக்கு சிறுநீரகப் பிரச்சனை இருந்து வந்ததில், கடந்த 15-ஆம் தேதி அந்த பிரச்சனை அதிகமானது.
இந்நிலையில் அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உஷா ராணிக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார், திரையுலகினர் இவரின் இறப்பிற்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

மறைந்த உஷாராணியின் உடல் ஆலப்பாக்கத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் வைக்கப்பட்டுள்ளது

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்