அச்சுறுத்தலுக்கு இடையில் துளிர்த்த நம்பிக்கை: சென்னையில் குணமடைந்த 80 வயதுக்கு மேற்பட்ட 436 பேர்..

அச்சுறுத்தலுக்கு இடையில் துளிர்த்த நம்பிக்கை: சென்னையில் குணமடைந்த 80 வயதுக்கு மேற்பட்ட 436 பேர்..

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் முதியவர்களே அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அதே போன்று தமிழகத்திலும் கொரோனாவின் தீவிர பாதிப்புக்கு ஆளாகி அதிகமாக பலியானவர்கள் 60 வயதுக்கு மேலானவர்களாகவே உள்ளனர். மாநிலத்தில் நிகழ்ந்துள்ள இறப்புகளில் 57% மரணங்கள் 60 வயதுக்கு மேலானவர்கள் ஆகும்.

சென்னையில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், 60 வயதுக்கு மேற்பட்ட 8 லட்சம் முதியவர்களை, சென்னை மாநகராட்சி கணக்கெடுத்து கண்காணித்து வருகிறது. சென்னையில் தற்போதைய நிலவரப்பட்டி, 23,581 பேர் கிசிச்சையில் உள்ளனர். இவர்களில், 422 பேர் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

இந்நிலையில், சென்னையில் இதுவரை 80 வயதுக்கு மேற்பட்ட436 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் உட்பட 20 பேருக்கு கொரோனா.. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், முதியவர்களை பொறுத்தவரை முன்கூட்டியே நோய் தொற்றை கண்டறிந்து சிகிச்சை பெறுவது, தைரியமான மனநிலை ஆகியவை முதியவர்களை இத்தொற்றில் இருந்து குணமடைய உதவுவதாக தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்