4 வயதில் சாதனை படைத்த சிறுவன்

4 வயதில் சாதனை படைத்த சிறுவன்

ஒசூர்:

ஓசூர் அருகே, பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பத்தில் 4 வயது சிறுவன் தேசிய சாதனை படைத்து அசத்தி வருகிறார்.

தற்போதைய தொழில்நுட்ப மாற்றங்களாலும், மேலை நாட்டு கலாச்சாரங்களாலும் பணக்கார விளையாட்டுக்களான கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட போட்டிகளில் தன்னுடைய பிள்ளைகளை பெற்றோர்கள் ஈடுபடுத்தி வருகின்றனர்.

இதனிடையே, பாரம்பரிய சிலம்பாட்டத்தை கற்றுக்கொள்ள ஈடுபடுத்திய பெற்றோர்கள், 4 வயது சிறுவனின் (புக் ஆப் ரெகார்ட் இந்தியா) உலக சாதனை படைத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த சூளகிரியில் வட்டார வள மையத்தில் ஆசிரியர் பயிற்றுனராக பணியாற்றி வருபவர் செந்தில் அவரது மனைவி வித்யலட்சுமி இவர்கள் சூளகிரி விஐபி நகரில் வசித்து வருகின்றனர். இவர்களது 4 வயதான தரஸ்வின் என்ற சிறுவன், தான் சிலம்பத்தின் சிறுவயதினருக்கான உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.

சிறு வயதில் மூச்சு பிரச்சனையில் தரஸ்வின் பாதிக்கப்பட்டிருந்தபோது பரிசோதித்த மருத்துவர்கள் நீண்ட நேரம் விழித்திருப்பதே மூச்சுவிட கஷ்டப்படுவதற்கான காரணம் எனவும், அது தனித் திறமையாக கூட இருக்கலாம் என அறிவுரைகளை வழங்கி உள்ளனர்.

மூன்று வயதிலிருந்தே மற்ற சிறுவர்களை காட்டிலும் சுறுசுறுப்பாகவும், திறமையானவனாக திகழ்ந்து வந்ததால் தரஸ்வினின் சேட்டையை தாங்க முடியாமலேயே ஏதேனும் பயிற்சிகளில் சேர்க்க பெற்றோர்கள் திட்டமிட்டனர். அப்போது அவர்களது குடியிருப்புக்கு மிக அருகாமையில் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பாட்டம் பயிற்சி வழங்கப்படுவதை அறிந்த செந்தில் – வித்யலட்சுமி தம்பதிகள், பவித்ராமன் என்கிற சிலம்ப பயின்றுனரிடம் மூன்றரை வயது சிறுவனான தரஸ்வினை சேர்த்துள்ளனர்.

துருதுருவென கற்கும் ஆர்வத்துடன் இருந்த தரஸ்வினின் மீது அதிகம் கவனம் செலுத்திய பயிற்சியாளர் பல்வேறு பயிற்சிகளை வழங்கி ஆர்வத்திற்கான தீனியை வழங்கி உள்ளார். சிலம்பம் கற்ற பிறகாக தரஸ்வினுக்கு மூச்சுப்பிரச்சனை முற்றிலும் குணமடைந்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

வயதை மீறி சிலம்பம் கற்றுத்தேர்ந்த தரஸ்வின் கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் முதலிடமும், ஈரோட்டில் நடைப்பெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டியில் முதலிடம், தேசிய அளவிலான போட்டியாக கோவாவில் நடைபெற்ற சிலம்பத்திலும் முதல் பரிசையும் வென்றுள்ளார்.

சேலத்தில் உலக அளவிலான சிலம்ப போட்டியிலும் முதல்பரிசு மற்றும் தங்கத்தையும் தட்டி வந்த தரஸ்வினின் இந்தகைய செயல்பாடுகளை ஆர்வமுடன் அனைவரும் பாராட்டி வந்துள்ளனர்.

இந்திய புக் ஆப் ரெகார்ட் என்கிற சாதனைக்காக பயிற்சியாளரின் ஆலோசனைப்படி தரஸ்வினின் சிலம்பட்டாத்தை சாதனையாக அங்கீகரிக்க விண்ணப்பித்திருந்தனர். தரஸ்வினின் சிலம்பத்தை பார்வையிட்டு இந்தியன் புக் ஆப் ரெக்கார்டும் உலக சாதனையாக அங்கீகரித்துள்ளது.

தரஸ்வினின் சாதனையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரும் நேரில் பாராட்டி உள்ளநிலையில் தற்போது கிருஷ்ணகிரி மாவட்ட கதாநாயகனாகவே விளங்கி வருகிறார் 4 வயதான சாதனை சிறுவன் தரஸ்வின்.

தரஸ்வின் சிலம்பத்தில் மட்டுமில்லாமல் எல்கேஜி வகுப்பில் பேச்சுப்போட்டி,படிப்பு என அனைத்திலும் சுட்டியாக இருப்பதால் தனியார் பள்ளியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தரஸ்வின் பங்கேற்காத போட்டியும் விழாக்களும் இல்லை என பாராட்டும் ஆசிரியர்கள். தரஸ்வின் ஒட்டுமொத்த பள்ளிக்கு ஹீரோவாகி உள்ளார் என பெருமைப்படுகின்றனர்.

4 வயதில் உலக சாதனைப்படைத்த சிறுவன் மேலும் பல சாதனைகளை படைத்து இந்திய திருநாட்டிற்கு பெருமை சேர்க்க அரசு அனைத்து உதவிகளையும் வழங்க முன்வர வேண்டுமென்பதே மற்ற பெற்றோர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்