தமிழகத்தில் 2003 பேர் கண்காணிப்பு

தமிழகத்தில் 2003 பேர் கண்காணிப்பு

சென்னை:

தமிழகம் முழுவதும் 2003 பயணிகள் ‘கொரோனா’ வைரஸ் எதிரொலியாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில், சீனாவிலிருந்து பரவிய ‘கொரோனா’ வைரஸ் பாதிப்புகள் 25 நாடுகளில் உள்ளது என சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, இந்த நோய் வராமல் த டுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து விமானத்தில் வரும் அனைத்து பயணிகளையும் தெர்மல் சோதனை செய்யப்படுகின்றனர்.

தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் விமான நிலையங்களில் இதுவரை வரை 32,993 பயணிகள் சோதனை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 2003 பயணிகள் 28 நாட்களுக்கு வீட்டிலேயே சுகாதாரத்துறையின் தொடர் கண்ககாணிப்பில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்